< Back
மாநில செய்திகள்
பனை மரத்தில் உள்ள அனைத்து பொருட்களும் மதிப்புமிக்கவை-அண்ணாமலை
மாநில செய்திகள்

பனை மரத்தில் உள்ள அனைத்து பொருட்களும் மதிப்புமிக்கவை-அண்ணாமலை

தினத்தந்தி
|
30 July 2023 5:33 PM IST

பனை மரத்தில் உள்ள அனைத்து பொருட்களும் மதிப்புமிக்கவை என ராமநாதபுரத்தில் அண்ணாமலை கூறினார்.

ராமேசுவரம்,

தமிழக பாஜக சார்பில் பிரசாரம் மேற்கொள்ள 'என் மண் என் மக்கள்' எனும் பாதயாத்திரை நேற்று முன்தினம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தொடங்கப்பட்டது. இந்த நடைபயணத்தை ராமேசுவரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கிவைத்தார்.

இன்று இந்த நடைபயணத்தின்போது அண்ணாமலை, ராமநாதபுரத்தில் உள்ள பனை தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, பனை மரத்தில் உள்ள அனைத்து பொருட்களும் மதிப்புமிக்கவை, இதன் மூலமாக பனை தொழிலாளர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் பனங்கள் உள்ளிட்டவற்றை மீண்டும் கொண்டு வரவும், பனையிலிருந்து கிடைக்கக்கூடிய அனைத்து பொருட்களும் மக்களுக்கு கிடைக்கும் வகையிலும், கருப்பட்டி போன்ற இனிப்பு பொருட்களை ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும் என்று அண்ணாமலை கூறினார்.

மேலும் செய்திகள்