< Back
மாநில செய்திகள்
வரும் 5-ம் தேதி முதல் அனைத்து ஜவுளி தொழில் உற்பத்திகள் நிறுத்தம் - தமிழ்நாடு தொழில்துறை கூட்டமைப்பு
மாநில செய்திகள்

வரும் 5-ம் தேதி முதல் அனைத்து ஜவுளி தொழில் உற்பத்திகள் நிறுத்தம் - தமிழ்நாடு தொழில்துறை கூட்டமைப்பு

தினத்தந்தி
|
2 Nov 2023 1:35 PM GMT

திருப்பூர் மற்றும் கோவையில் வரும் 5-ம் தேதி முதல் அனைத்து ஜவுளி தொழில் உற்பத்திகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்,

தமிழ்நாட்டில் விவசாயத்துக்கு அடுத்தாற்போல், பஞ்சாலைகள், நூற்பாலைகள், ஆடைகள், பின்னலாடை, விசைத்தறி, கைத்தறி போன்ற ஜவுளித்தொழில், நெசவுத்தொழில் பெரும் வேலைவாய்ப்புகளை அளித்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் நெசவுத்தொழிலாளர்கள் பரவலாக இருந்தாலும்,பின்னலாடை தொழில்கள் அதிகமாக இருப்பது "டாலர் சிட்டி" என்று அழைக்கப்படும் திருப்பூரில்தான். இது ஏன் டாலர் சிட்டி? என்று அழைக்கப்படுகிறது என்றால், வெளிநாடுகளுக்கு பருத்தி ஆடைகளை ஏற்றுமதி செய்து டாலர்களை ஈட்டித்தருவதன் காரணமாக இது அவ்வாறு கூறப்படுகிறது.

இந்நிலையில் திருப்பூர் மற்றும் கோவையில் வரும் 5-ம் தேதி முதல் அனைத்து ஜவுளி தொழில் உற்பத்தி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நூல் விலையேற்றம் மற்றும் மின் கட்டண உயர்வு போன்றவற்றை கண்டித்து 5-ம் தேதி முதல் 25 -ம் தேதி வரை 20 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு தொழில்துறை கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்