< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்யப்படும்: தமிழக அரசு
|13 Oct 2023 1:40 PM IST
அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்யப்படும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மதுரை,
கடலோரத்தில் இருக்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாட்டில் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், நிதிநிலையை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது. இதனை தொடர்ந்து, அரசின் விளக்கத்தை ஏற்று நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்.