< Back
மாநில செய்திகள்
சென்னையில் உள்ள அனைத்து ஆர்.டி.ஓ. அலுவலகங்களும் சனிக்கிழமைகளில் செயல்பட வேண்டும் - தமிழக அரசு உத்தரவு
மாநில செய்திகள்

சென்னையில் உள்ள அனைத்து ஆர்.டி.ஓ. அலுவலகங்களும் சனிக்கிழமைகளில் செயல்பட வேண்டும் - தமிழக அரசு உத்தரவு

தினத்தந்தி
|
13 July 2023 2:56 PM IST

சனிக்கிழமைகளில் சென்னையில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை மாநகரில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து(ஆர்.டி.ஓ.) அலுவலகங்களும் சனிக்கிழமைகளில் செயல்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சனிக்கிழமைகளில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பணிக்கு செல்வோர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு மீனம்பாக்கம், செங்குன்றம் உள்பட அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் சனிக்கிழமைகளில் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


மேலும் செய்திகள்