'அனைத்து மக்களும் பாரத நாட்டின் ஒரு குடும்ப உறுப்பினர்கள்' - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
|மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு பிரச்சினைகள் ஏற்பட்டதாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
சென்னை,
உத்தரகாண்ட் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னையில் வசிக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பங்கேற்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோரை கவுரவித்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, நாட்டில் பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் இருந்தாலும் அனைவரும் பாரத நாட்டின் ஒரு குடும்ப உறுப்பினர்கள் என்பதை உணர வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பிரச்சினை இருந்து வருவதாக குறிப்பிட்ட ஆர்.என்.ரவி, இந்தியா சுதந்திரம் அடைந்தபோது எந்த பிரச்சினையும் இருக்கவில்லை எனவும், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.