< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடங்கியது
|9 Feb 2023 12:11 AM IST
பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடங்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் அகில இந்திய பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி 5 நாட்கள் நடக்கிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி கரூர் திருவள்ளூவர் விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. போட்டியை கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ், கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் வீரன்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் சென்னை, சத்தீஸ்கர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 12 அணிகள் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகத்தினர் செய்திருந்தனர். வருகிற 12-ந்ேததி வரை பல்வேறு சுற்றுகளாக போட்டி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.