கரூர்
கரூரில், அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடக்கம்
|கரூரில், அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடங்கி உள்ளது.
தனியார் நிறுவனங்கள் மற்றும் கரூர் கூடைப்பந்து கிளப்பும் இணைந்து நடத்தும் அகில இந்திய ஆண்கள் கூடைப்பந்து போட்டியும், அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டியும் கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது.
விழாவிற்கு கரூர் கூடைப்பந்து கிளப் தலைவர் வி.என்.சி. பாஸ்கர் தலைமை தாங்கினார். செயலாளர் முகமது கமாலுதீன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து ஆண்களுக்கான முதல் போட்டியில் திருவனந்தபுரம் கே.எஸ்.இபி. அணியும், டெல்லி இந்தியன் ரெயில்வே அணியும் மோதின. இதில் திருவனந்தபுரம் கே.எஸ்.இபி. அணி வெற்றி பெற்றது.
பெண்கள் போட்டியில் வடக்கு ரெயில்வே அணியும், கேரளா போலீஸ் அணியும் மோதின. இதில் வடக்கு ரெயில்வே அணி வெற்றி பெற்றது.