< Back
மாநில செய்திகள்
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு விளக்கம்
மாநில செய்திகள்

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு விளக்கம்

தினத்தந்தி
|
17 Aug 2022 6:21 AM IST

அனைத்து தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி 01.07.2022 முதலே உயர்த்தி வழங்கப்படும்.

சென்னை,

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படை உயர்வு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக முதல் அமைச்சர் 75-வது சுதந்திர தின உரையில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 01.07.2022 முதல் அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பின்படி தலைமைச் செயலளாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி 01.07.2022 முதலே உயர்த்தி வழங்கப்படும். இதற்கான அரசாணைகள் விரைவில் தனித்தனியே வெளியிடப்படும். என அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்