< Back
மாநில செய்திகள்
கடும் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து

கோப்புப்படம்

மாநில செய்திகள்

கடும் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து

தினத்தந்தி
|
30 Jan 2023 11:23 PM IST

கடும் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

ஸ்ரீநகர்,

மோசமான வானிலை மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இன்று காஷ்மீருக்கு வரும் விமானங்கள் மற்றும் காஷ்மீரில் இருந்து செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று இரவு தொடங்கிய பனிப்பொழிவு இன்னும் பல இடங்களில் தொடர்கிறது. பனிப்பொழிவு பார்வையை 500 மீட்டருக்குக் குறைத்ததால், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட 68 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

மேலும் பனிப்பொழிவு மற்றும் பல இடங்களில் நிலச்சரிவு காரணமாக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. சீரற்ற காலநிலை காரணமாக பாரமுல்லா-பனிஹால் ரெயில் பாதையின் ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்