ரூ.100-ல் நாள் முழுவதும் பயணம்- மெட்ரோ ரெயிலில் சிறப்பு சலுகை
|மெட்ரோ ரெயிலில் நாள் முழுவதும் ரூ.100-ல் பயணம் மேற்கொள்ளும் சிறப்பு சலுகையை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயிலில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் நிலவும் இந்த போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ,மெட்ரோ ரெயிலில் நாள் முழுவதும் ரூ.100-ல் பயணம் மேற்கொள்ளும் சிறப்பு சலுகையை மெட்ரோநிர்வாகம் அறிவித்துள்ளது.
அதாவது, ஒரு நாள் சுற்றுலா அட்டையை 150 ரூபாயை கொடுத்து பெற்றுக் கொள்ள வேண்டும். அதில் வைப்புத்தொகை 50 ரூபாய் திருப்பி ஒப்படைக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. .வாரத்தின் இறுதி நாட்களில் சிறப்பு சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், சுற்றுலா அட்டை ஒருநாள் மட்டுமே செல்லும் எனவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
அட்டையை ஒப்படைத்தவுடன் 50 ரூபாய் வைப்புத்தொகை திருப்பி தரப்படும் எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.