தஞ்சாவூர்
அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை
|ஆடுதுறை தற்காலிக பஸ் நிலையத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவிடைமருதூர்:
தற்காலிக பஸ் நிலையம்
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பஸ் நிலையம் சேதமடைந்ததால் இடிக்கப்பட்டு புதிய பஸ் நிலையம் கட்டும் பணி நடைபெற உள்ளது.
இதனால் பழைய பஸ் நிலையம் அருகே ரூ.10 லட்சம் மதிப்பில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு கழிவறை, குடிநீர், நிழற்குடை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து நெரிசல்
இந்த நிலையில் தற்காலிக பஸ் நிலையத்தில் எந்த பஸ்சும் நிறுத்தப்படுவதில்லை. இதனால் பழைய பஸ் நிலையம் இடிக்கப்பட்ட இடத்தில் சாலையின் இருபுறமும் பயணிகள் கூட்டமாக பஸ்சுக்காக காத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக அனைத்து பஸ்களும் தற்காலிக பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி விட சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.