< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில்தான்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|27 Aug 2024 12:32 PM IST
கட்சியினரின் செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு விசாரிப்பேன் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அமெரிக்கா சுற்றுப்பயணம் செல்கிறார். வெளிநாடு பயணம் மேற்கொள்ள நிலையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில் தான் இருக்கும். அமெரிக்காவில் இருந்தாலும் தாய்வீடான தமிழ்நாடு பற்றியேதான் என் மனது சிந்திக்கும்.
கட்சியினரின் செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு விசாரிப்பேன். ஒரு டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை அடைய உங்களில் ஒருவனாக பயணிக்கிறேன். பயணத்தின் நோக்கம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி பல தலைமுறைகளுக்கு பயன் தர வேண்டும் என்பதேயாகும். விமர்சனம் விவாதம் செய்வோருக்கு நாம் நிறைவேற்றும் பயனுள்ள செயல்களே பதில்களாக அமையட்டும்" என்று தெரிவித்துள்ளார்.