< Back
மாநில செய்திகள்
விஷ சாராய மரண விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கு 18-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
மாநில செய்திகள்

விஷ சாராய மரண விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கு 18-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

தினத்தந்தி
|
11 July 2024 4:53 PM IST

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது.

சென்னை,

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்தவழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி அதிமுக, பாமக மற்றும் பாஜக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் அரசு பதில் தர சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கப்பித்துள்ளது. சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடர்ந்துள்ள அனைத்து மனுதாரர்களுக்கும் அறிக்கை மற்றும் பதில் மனு தர வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட ஐகோர்ட்டு, வழக்கின் விசாரணையை 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மேலும் செய்திகள்