< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
ஆலங்கிணறு சாஸ்தா கோவிலில்குடிநீர் தொட்டி திறப்பு
|18 Oct 2023 12:15 AM IST
ஆலங்கிணறு சாஸ்தா கோவிலில் குடிநீர் தொட்டி திறப்பு விழா நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு நெல்லால் பொங்கலிட்ட நெட்டுவான் கோட்டை ஹரிகர புத்திர சாஸ்தா கோயிலில் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் 15 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு கோவில் நிர்வாக்குழுவைச் சேர்ந்த துரைச்சாமி, பக்தர்கள் பயன்பாட்டுக்கு தண்ணீர் தொட்டியை திறந்து வைத்தார். துரைராஜ் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகக்குழுவைச் சேர்ந்த ராமலிங்கம், ஆசிரியர் முருகன், சுடலைக்கண், ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூசாரிகள் முத்துபாண்டி, மணிகண்டன் ஆகியோர் சிறப்பு பூஜை நடத்தினர்.