< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
திருத்துறைப்பூண்டி அருகே ஆகாச முத்து மாரியம்மன் கோவில் குடமுழுக்கு
|18 Sept 2023 12:30 AM IST
திருத்துறைப்பூண்டி அருகே ஆகாச முத்து மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலமருதூரில் ஆகாச முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்தன. இதன் முடிவில் யாக சாலை பூஜைகள் நடந்தன. யாகசாலை பூஜைகளுக்கு பின்னர் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. பின்னர் கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு, குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.