< Back
மாநில செய்திகள்
ஆகாச கண்ண மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

ஆகாச கண்ண மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா

தினத்தந்தி
|
27 July 2023 1:51 AM IST

ஆகாச கண்ண மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா நடந்தது.

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலடிக்குமுளை ஊராட்சியில் ஆகாச கண்ண மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி திருவிழா கடந்த 21-ந் தேதி மெய்ஞான மூர்த்தி அய்யனாருக்கு சிறப்பு பூைஜகள் செய்து கால் ஊன்றும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 23-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காவடி எடுத்தல், 31-ந் தேதி (திங்கட்கிழமை) குத்துவிளக்கு பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ்1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அலங்கார பல்லக்கில் அம்மன் வீதியுலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலடிக்குமுளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்