< Back
மாநில செய்திகள்
நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஆஜர்
திருச்சி
மாநில செய்திகள்

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஆஜர்

தினத்தந்தி
|
2 Dec 2022 3:26 AM IST

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஆஜரானார்.

வளர்ப்பு மகள்

சினிமா நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா (வயது 32). இவர் சில மாதங்களுக்கு முன்பு நாடக நடிகரான முனீஸ்ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் நடிகர் ராஜ்கிரண் மற்றும் அவரது மனைவி பத்மஜோதி என்ற கதிஜாவுக்கு விருப்பம் இல்லாததால், மகளுடன் தொடர்பில்லாமல் இருந்து வருகின்றனர்.

இதற்கிடையே ஜீனத் பிரியா, தனது கணவAjar is the adopted daughter of actor Rajkiranருடன் திருச்சி மாவட்டம், துறையூர் பெருமாள்மலை அடிவாரத்தில் வசிக்கும் தனது தந்தையான இளங்கோவன் வீட்டிற்கு வந்தார். தற்போது அவர்கள் அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இளங்கோவன், ஓய்வு பெற்ற வணிக வரித்துறை அலுவலர் ஆவார்.

துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜர்

இந்நிலையில் சமீபத்தில் கதிஜா தனது மகள் ஜீனத் பிரியா மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். அதில், ஜீனத் பிரியா மற்றும் முனீஸ்ராஜ், இளங்கோவன் ஆகிய 3 பேரும் தன்னையும், தன் கணவர் ராஜ்கிரணையும் பற்றி சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தும், தரக்குறைவான செய்திகளை பதிவிட்டும் வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்த முசிறி அனைத்து மகளிர் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து ஜீனத் பிரியா உள்பட 3 பேரையும், நேற்று முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி 3 பேரும் நேற்று காலை முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்திய துணை சூப்பிரண்டு யாஸ்மின், அவர்களை மீண்டும் மாலையில் ஆஜராகும்படி கூறியுள்ளார்.

நியாயம் வேண்டும்

பின்னர் இது குறித்து ஜீனத் பிரியா, நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது தாய் பத்மஜோதி என்ற கதிஜா, 18 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை இளங்கோவனிடம் இருந்து பிரிந்து என்னை மட்டும் அழைத்துக் கொண்டு சென்னைக்கு சென்றார். அங்கு நடிகர் ராஜ்கிரணை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் என்னை வளர்த்து வந்தனர். எனக்கு தற்போது 32 வயதாகிறது. இத்தனை காலமான பிறகும் எனக்கு திருமணம் செய்து வைக்காமல், என்னை ஒரு வேலைக்காரியாகத்தான் வைத்திருந்தார்கள்.

இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த நடிகர் முனீஸ்ராஜை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டேன். எனது தாய் என் மீது போலீசில் புகார் செய்துள்நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஆஜர்ளார். இவ்வளவு காலம் என்னைத்தான் அவர்கள் துன்புறுத்தினர். இந்த பிரச்சினையை ராஜ்கிரண் நினைத்தால்தான் முடிக்க முடியும். நான் திருமணம் செய்து கொண்டு நல்லபடியாக வாழ்ந்து வருகிறேன். என்னுடன், அவர்கள்தான் பிரச்சினைக்கு வருகிறார்கள். எனக்கு நியாயம் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பரம்பரை தாலி...

ஜீனத் பிரியா மீது அவரது தாய் கொடுத்த புகார் குறித்து கேட்டபோது துணை சூப்பிரண்டு யாஸ்மின் கூறுகையில், 'கதிஜா, தனது மகள் 17 பவுன் பரம்பரை தாலியை கொடுக்க வேண்டும் என்றும், தனது கணவர் ராஜ்கிரண் மீது அவதூறாக வலைத்தளங்களில் செய்தி பரப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் புகார் மனு அளித்துள்ளார்' என்றார். மேலும் இன்று(வெள்ளிக்கிழமை) இருதரப்பினரும் ஆஜராவதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

மேலும் செய்திகள்