கடலூர்
அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம்
|சின்னசேமக்கோட்டை அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.
பண்ருட்டி,
யாகசாலை பூஜை
பண்ருட்டி அருகே உள்ள சின்னசேமக்கோட்டை கிராமத்தில் பொற்கலை, பூரணி உடனுறை அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பணிகள் நடைபெற்று, நாளை(புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு விநாயகர் பூஜையுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து, நவக்கிரக பூஜை, தன பூஜை நடந்து தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர், வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், நடந்து முதல் கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது.
நாளை கும்பாபிஷேகம்
அதை தொடர்ந்து, நாளை(புதன்கிழமை) காலை 6 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. பின்னர் கும்ப பூஜைகள் நடந்து, யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. காலை 9 மணிக்கு மேல் பொற்கலை, பூரணி உடனுறை அய்யனாரப்பன் சாமி விமான கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து, பரிவாரமூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. பின்னர் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) முதல் 48 நாட்களுக்கு கோவிலில் மண்டலாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை சின்னசேமக்கோட்டை படையாட்சி குலதெய்வ வகையறாக்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.