< Back
மாநில செய்திகள்
நாகர்கோவிலில்ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்40 பேர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

நாகர்கோவிலில்ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்40 பேர் கைது

தினத்தந்தி
|
25 Jan 2023 2:15 AM IST

நாகர்கோவிலில்ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் செய்த 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில்:

தொழிலாளர்களுக்கு ரூ.21 ஆயிரத்துக்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் ரூ.6 ஆயிரத்துக்கு குறையாமல் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். நலவாரிய பலன்களை உயர்த்தி வழங்க வேண்டும் மற்றும் 240 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. குழு சார்பில் நேற்று நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள இந்தியன் வங்கி முன் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் அனில் குமார் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் உள்பட பலர் கலந்து கொண்டு சாலையில் அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இந்த போராட்டத்தையொட்டி இந்தியன் வங்கி முன் நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன் குமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

அந்த வகையில் 17 பெண்கள் உள்பட மொத்தம் 40 பேர் கைது செய்யப்பட்டு அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்