< Back
மாநில செய்திகள்
ஏ.ஐ.டி.யு.சி. உள்ளாட்சி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி
மாநில செய்திகள்

ஏ.ஐ.டி.யு.சி. உள்ளாட்சி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
20 July 2023 12:40 AM IST

ஏ.ஐ.டி.யு.சி. உள்ளாட்சி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஒப்பந்த முறையை முற்றிலும் கைவிட வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் திருச்சி மாவட்ட உள்ளாட்சி தொழிலாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.) சார்பில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் துணைச் செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இதில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊதியத்தை காலதாமதமின்றி வழங்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து தூய்மை பணியாளர்களையும் நிரந்தர பணியாளர்களாக மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் உள்ளாட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்