< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களை மேம்படுத்த வேண்டும் -  தயாநிதி மாறன்
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களை மேம்படுத்த வேண்டும் - தயாநிதி மாறன்

தினத்தந்தி
|
29 July 2022 11:51 PM IST

தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களை மேம்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் எம்.பி, 'தஞ்சாவூர், தூத்துக்குடி, கோவை விமான நிலையங்கள் எப்போது விரிவுபடுத்தப்படும்' என்று கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிர் ஆதித்யா பதில் அளித்து கூறியதாவது,

அனைத்து விமான நிலையங்களை மேம்படுத்துவது என்பது தொடர் நடவடிக்கை. அடுத்த 5 ஆண்டுகளில் விமான நிலையங்களை மேம்படுத்த மூலதன செலவின் இலக்காக ரூ.91 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் திருச்சி விமான நிலையத்தில் ரூ.80.43 கோடி செலவிலும், மதுரை விமான நிலையத்தில் ரூ.48.36 கோடியும், கோவையில் ரூ.65.84 கோடியிலும், சென்னை விமான நிலையத்தில் ரூ.138.16 கோடி செலவிலும் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

தஞ்சாவூர் விமான நிலையத்தில் உள்ள புதிய ராணுவ விமான தளத்தை மேம்படுத்துவதற்கான அறிவிப்பை இந்திய விமான நிலைய ஆணையம் முன்மொழிந்துள்ளது. கோவையில் ஓடுதளத்திற்கான இடத்தை மாநில அரசு கையப்படுத்தி கொடுக்கப்பட்ட பிறகு விரிவாக்க பணிகள் தொடங்கப்படும். தூத்துக்குடியில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்