< Back
மாநில செய்திகள்
விமான நிலைய விரிவாக்கம்; மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டியது அரசின் கடமை - ஜி.கே.வாசன் கருத்து
மாநில செய்திகள்

விமான நிலைய விரிவாக்கம்; மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டியது அரசின் கடமை - ஜி.கே.வாசன் கருத்து

தினத்தந்தி
|
28 Aug 2022 10:38 PM IST

விமான நிலைய விரிவாக்கத்திற்கு தொடர்புடைய மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும் என்றும் ஜோலார்பேட்டை-கிருஷ்ணகிரி வழியாக ஓசூர் ரெயில் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் டெல்லியில் மத்திய மந்திரியிடம் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

மேலும் பரந்தூர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு தொடர்புடைய மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு 100 சதவீதம் நம்பிக்கை கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்