< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வங்காள தேசத்துக்கு மீண்டும் விமான சேவை
|7 Aug 2024 12:27 PM IST
சென்னையில் இருந்து டாக்காவுக்கு இன்று பிற்பகல் இண்டிகோ விமானம் புறப்பட்டு செல்ல உள்ளது.
சென்னை,
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில், இட ஒதுக்கீடு விவகாரத்தில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதையடுத்து வங்காளதேசத்தில் உச்சகட்ட பதற்றம் நீடித்து வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று டெல்லி, சென்னை, மும்பை ஆகிய விமான நிலையங்களில் இருந்து டாக்காவிற்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், சென்னையில் இருந்து வங்காள தேசத்துக்கு இன்று முதல் மீண்டும் விமானம் இயக்கப்படும் என விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து பிற்பகல் 1.55 மணிக்கு இண்டிகோ விமானம் டாக்காவுக்கு புறப்பட்டு செல்லும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.