< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பாஜக கூட்டணியில் இருந்து விலகினாலும் அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது - அப்துல் சமத்
|7 Jan 2024 6:27 PM IST
இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்காக 40 தொகுதிகளிலும் மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்கள் களப்பணியாற்றுவார்கள் என்று அப்துல் சமத் கூறியுள்ளார்.
வேலூர்,
பாஜக கூட்டணியில் இருந்து விலகினாலும் அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது என்று மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகினாலும் இரு தரப்பும் பேசி வைத்துக் கொண்டு நடத்தக்கூடிய நாடகமாகவே சிறுபான்மையின மக்கள் கருதுகிறார்கள். எனவே, நிச்சயமாக சிறுபான்மையின மக்களின் வாக்குகளை அதிமுகவால் பெறமுடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
நாடாளுமன்ற தேர்தலில் தொகுதியை கேட்டிருக்கிறோம். திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியும் போட்டியிடக்கூடிய வகையில் இந்த தேர்தல் இருக்கும். நிச்சயமாக இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்காக 40 தொகுதிகளிலும் மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்கள் களப்பணியாற்றுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.