< Back
மாநில செய்திகள்
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனை கூட்டம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
மாநில செய்திகள்

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனை கூட்டம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

தினத்தந்தி
|
23 July 2024 11:42 AM IST

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.

சென்னை,

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 26-ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். எழும்பூர் அசோகா ஹோட்டலில் மாலை 4.30 மணியளவில், பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

இதில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்