< Back
மாநில செய்திகள்
ஒரே கட்சி, ஒரே உணர்வுடன் தான் அதிமுக தொண்டர்கள் உள்ளனர் - தமிழ்மகன் உசேன் பேட்டி
மாநில செய்திகள்

ஒரே கட்சி, ஒரே உணர்வுடன் தான் அதிமுக தொண்டர்கள் உள்ளனர் - தமிழ்மகன் உசேன் பேட்டி

தினத்தந்தி
|
23 Jun 2022 4:32 PM IST

ஒரே கட்சி, ஒரே உணர்வுடன் தான் அதிமுக தொண்டர்கள் உள்ளனர் என்று அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை கிரீன்வேஸ் சாலையில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுக அவை தலைவராக என்னை தேர்ந்தெடுத்ததற்கு அனைவருக்கும் நன்றி. அதிமுக தொண்டர்கள் ஒரே கட்சி, ஒரே உணர்வுடன் தான் உள்ளனர். மேடையில் ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட சம்பவம் குறித்து எனக்கு தெரியாது.

ஜூலை 11-ம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும். கூட்டத்தில் ஒற்றை தலைமை தான் தீர்மானமாக நிறைவேற்றப்படும். தீர்மானங்கள் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் பேசி முடிவு எடுப்பார்கள். எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொது செயலாளராக வருவதற்கான சூழல் கண்டிப்பாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்