< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் - புகைப்படத் தொகுப்பு

தினத்தந்தி
|
16 Sept 2022 2:22 PM IST

தமிழகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை,

தமிழகத்தில் தி.மு.க. அரசு அமல்படுத்தி இருக்கும் மின் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட செயலாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

  • மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து , கண்டன ஆர்ப்பாட்டம் டி.கல்லுப்பட்டியில் நடைபெற்றது.
  • அரியலூர் தாலுக்கா அலுவலகம் எதிரில் மின் உயர்வை கண்டித்து மாவட்ட அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே வேலூர் மாநகர அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் அ.தி.மு.க. சார்பில் கண்டன கொளுத்தும்வெயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மேட்டூர் சதுரங்காடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
  • கோபி பஸ் நிலையத்தில் ஈரோடு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சர் கே ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார்.
  • ராமநாதபுரத்தில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • சிவகங்கையில் அதிமுக மாவட்ட கழகம் சார்பில் மாபெரும் கண்டண ஆர்பாட்டம் நடைபெற்றது.
  • ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது
  • திருப்பத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே மின் கட்டண உயர்வை கண்டித்து தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் அ.திமு.கவினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • கோவை மாவட்ட அதிமுக சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • நெல்லை மாவட்ட அ.தி.மு.க.சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது .மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கி பேசினார்.


மேலும் செய்திகள்