< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம்... விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி

27 Jun 2022 9:43 AM IST
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்தார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ் குமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், கூறும்போது, வலிமைமிக்க ஒற்றை தலைமைக்கு ஏற்றவராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். இதனையே அனைவரும் விரும்புகின்றனர். புரட்சித்தலைவி அம்மா கூறியது போல தன்னலம் கருதாது கட்சியின் நலனையும் கவனத்தில் கொண்டால், அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.