< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அதிமுக எழுச்சி மாநாடு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் இட்டுள்ளது - ஆர்.பி.உதயகுமார்
|23 Aug 2023 4:20 PM IST
சந்திராயன் 3-ன் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்க வேண்டும் என வேண்டுகிறேன் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மதுரை,
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு அதிமுக எழுச்சி மாநாடு அடித்தளம் இட்டுள்ளது. அதிமுக மாநாட்டில் மக்கள் நலனுக்காக 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக-காங்கிரஸ் ஆட்சியில் தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் மரணங்களுக்கு திமுக -காங்கிரஸ் கட்சிகளே பொறுப்பு.
ராகுல்காந்தி பிரதமர் ஆனவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறுகிறார்கள். அவர் எப்போது பிரதமர் ஆவது? எப்போது நீட் தேர்வை ரத்து செய்வது? சந்திராயன் 3-ன் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்க வேண்டும் என வேண்டுகிறேன். சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் தரையிறங்குவது இந்தியாவுக்கு மிகப்பெரிய பெருமையாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.