< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பட்டா இல்லாத புறம்போக்கு நிலம்" - கோவை செல்வராஜ் பேட்டி
|4 Aug 2022 11:23 PM IST
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் என்று கோவை செல்வராஜ் கூறினார்.
கோவை,
கோவையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவே உண்மையான அதிமுக. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, பட்டா இல்லாத புறம்போக்கு நிலம்போல உள்ளது. அவர்கள் நீதிமன்றங்களுக்கு சென்றாலும் தேர்தல் ஆணையம் எங்களை அங்கீகரித்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது தலைமையிலேயே செயல்பட்டு வருகிறது. அதிமுக மாவட்ட தலைமை அலுவலகம் யாருக்கும் சொந்தம் இல்லை.
தொண்டர்களின் ஆதரவு ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு தான் இருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் 30 பேரை வைத்துக்கொண்டு பழனிசாமி பேசி வருகிறார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டாத கருத்துகளை கூறி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.