அதிமுக தலைமை அலுவலக நுழைவு வாயிலுக்கும் சீல்..!
|ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக நுழைவு வாயிலுக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
சென்னை,
சென்னை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
தலைமை அலுவலகத்தில் உள்ள கதவுகள் உடைக்கப்பட்டன. அதன் பின் அங்கு வந்த ஓ.பன்னீர் செல்வம் கடந்த சில மணி நேரம் அதிமுக தலைமை அலுவலகத்திலேயே இருந்தார். அவர் சற்று நேரத்திற்கு முன் தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.
இதனிடையே, ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. அதிமுக தலைமை கழக அலுவகம் அமைந்துள்ள பகுதி முழுவதும் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக தலைமை கழக அலுவலகம் வருவாய்த்துறையினரால் சீல் வைத்தனர். தலைமை கழகத்தில் உள்ள அனைத்து அறைகளும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக நுழைவு வாயிலுக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் தற்போது சீல் வைத்துள்ளனர். ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீண்டும் மோதலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் அதிமுக தலைமை கழக அலுவலகம் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.