< Back
மாநில செய்திகள்
அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கு: சசிகலா மேல்முறையீட்டு மனு ஆகஸ்ட் 30ஆம் தேதி  விசாரணை
மாநில செய்திகள்

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கு: சசிகலா மேல்முறையீட்டு மனு ஆகஸ்ட் 30ஆம் தேதி விசாரணை

தினத்தந்தி
|
22 Aug 2023 4:26 PM IST

மேல்முறையீட்டு மனு ஆகஸ்ட் 30ஆம் தேதி விசாரணைக்கு வரும் என சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதற்கு எதிரான சசிகலாவின் மேல்முறையீட்டு மனு ஆகஸ்ட் 30 ஆம் தேதி சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. சசிகலா தரப்பு முறையீட்டை ஏற்று சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.

அதிமுகவிலிருந்து நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரிய சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சசிகலாவின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சசிகலா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு ஆகஸ்ட் 30ஆம் தேதி விசாரணைக்கு வரும் என சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்