< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் இன்று அதிமுக அவசர செயற்குழு கூட்டம்
|16 Aug 2024 8:17 AM IST
எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை,
அதிமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில், கட்சியின் செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநில செயலாளர்கள், எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில், கட்சி நிர்வாகம் குறித்தும், 2026 சட்டமன்ற தேர்தல் பணிக்குழு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.