< Back
மாநில செய்திகள்
அதிமுக தேர்தல் அறிக்கை இப்படித்தான் இருக்கும்: ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி
மாநில செய்திகள்

அதிமுக தேர்தல் அறிக்கை இப்படித்தான் இருக்கும்: ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

தினத்தந்தி
|
25 Jan 2024 1:00 PM IST

திமுகவை போல மாநிலத்தின் உரிமையை தாரைவார்த்து கொடுக்காமல் மாநில உரிமைகளை பேணிக்காக்கும் அறிக்கையாக இருக்கும் என்று ஜெயக்குமார் பேசினார்.

சென்னை,

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில் அதிமுக அண்மையில் 4 முக்கிய குழுக்களை அறிவித்தது. தொகுதிப்பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரசார குழு மற்றும் தேர்தல் விளம்பரக் குழுக்களில் யார் யார் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதன்படி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் நத்தம் விஸ்வநாதன்,பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை உள்ளிட்ட 10 பேர் இடம்பிடித்துள்ளனர். தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இந்த குழு இன்று ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக்குப் பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2021 ஆம் ஆண்டு திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையை பார்த்து மக்கள் ஏமாந்து விட்டனர். இனி எதற்கும் மக்கள் ஏமாற மாட்டார்கள். அதிமுக தேர்தல் அறிக்கையை பொறுத்தவரை மக்கள் நலன் சார்ந்த அறிக்கையாக இருக்கும். மாநில உரிமைகளை பேணிக் காக்கும் ஒரு அறிக்கையாக இருக்கும். தேர்தல் அறிக்கை குழு ஒன்று கூடி பணிகளை தொடங்கியுள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஹீரோவாக அமையும். தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உரிய நேரத்தில் தெரிய வரும்.

இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்