< Back
மாநில செய்திகள்
புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசைக்கு அதிமுக கோரிக்கை..!
மாநில செய்திகள்

புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசைக்கு அதிமுக கோரிக்கை..!

தினத்தந்தி
|
10 Oct 2022 5:05 PM IST

புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திரும்பப்பெற வேண்டும் என்று அன்பழகன் கூறியுள்ளார்.

சென்னை,

புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திரும்பப்பெற வேண்டும் என்று அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இருக்கும்போது, யூனியன் பிரதேசமான புதுச்சேரி மாநில துணைநிலை கவர்னருக்கு பல்வேறு அதிகாரங்கள் இருந்தாலும் அந்த அரசுக்கு மதிப்பளிக்க வேண்டியது, அரசின் செயல்பாட்டுக்கு மதிப்பு கூட்டவேண்டியது துணைநிலை கவர்னரின் கடமையும் பொறுப்புமாகும்.

மக்கள் எல்லாரும் என்னிடம் வந்து குறை சொல்லுங்கள் என்று கூறுவது சரியானது அல்ல. அந்த அறிவிப்பை துணைநிலை கவர்னர் தமிழிசை திரும்பப் பெற வேண்டும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்