< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அதிமுக வழக்கு: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு - இன்று விசாரணை...!
|29 March 2023 7:07 AM IST
அ.தி.மு.க. வழக்கில் ஓ.பன்னீர் செல்வம் மனுக்கள் தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
சென்னை,
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி குமரேஷ் பாபு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளையும் அறிவிக்கலாம் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதோடு, வெற்றி சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவை எதிர்த்து இருநீதிபதிகள் அமர்வில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார்.
ஓபிஎஸ்-சின் மேல்முறையீட்டை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் இன்று விசாரிக்கின்றனர்.