< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கொடநாடு வழக்கை பயன்படுத்தி அதிமுகவை அச்சுறுத்த முடியாது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
|17 Sept 2022 6:05 PM IST
கொடநாடு வழக்கை பயன்படுத்தி அதிமுகவை அச்சுறுத்த முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
கொடநாடு வழக்கை பயன்படுத்தி அதிமுகவை அச்சுறுத்த முடியாது. கொடநாடு வழக்கை சட்டப்படி சந்திப்போம். வார்த்தைகளை எப்படி கையாள வேண்டும் என்பது எங்களுக்கும் தெரியும். அரசியல் பண்பாடு கருதி நாங்கள் அவ்வாறு பேசமாட்டோம்.
அரசியலில் அநாகரீகமான வார்த்தைகளை ஆர்.எஸ்.பாரதி பயன்படுத்துகிறார். அரசியலில் பண்பாடு வேண்டும்; பதவி பெறுவதற்காக அதிமுகவை பற்றி அவர் விமர்சிக்கிறார். அவர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை திருப்தி படுத்தி பதவி பெற நினைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.