< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பா.ஜ.க. இல்லையெனில் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாகி இருக்க முடியாது - எல்.முருகன்
|22 Aug 2024 3:52 PM IST
பா.ஜ.க. வாக்குகளை மாநிலம் முழுவதும் அ.தி.மு.க. வாங்கி உள்ளதாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னை,
பா.ஜ.க. 4 எம்.எல்.ஏ.க்களை வென்றதற்கு அ.தி.மு.க.தான் காரணம். 2026-ல் தனியாக நின்று ஒரு சீட்டில் ஜெயித்துக்காட்ட முடியாமா, சொந்தக் கால் எதுவும் இல்லாமல் பா.ஜ.க எங்களைப் பார்த்துப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய இணை மந்திரி எல்.முருகன், "பா.ஜ.க. மட்டும் இல்லையென்றால் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாககூட இருந்திருக்க முடியாது. பா.ஜ.க. வாக்குகளை மாநிலம் முழுவதும் அ.தி.மு.க. வாங்கி உள்ளது" என்று அவர் கூறினார்.