திருவள்ளூர்
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
|சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்கங்கே போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்போல் திருவள்ளூர் ரெயில் நிலையம் முக்கியமான ரெயில் நிலையம் என்பதால் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்தில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன் தலைமையில் நேற்று காலை திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் பொதுமக்களிடம் அவர்கள் கொண்டுவரும் பேக் உள்ளிட்ட பொருட்கள் மெட்டல் டிடெக்டர் கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து மணவூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன் தலைமையில் ரெயில் தண்டவாளங்களை கடப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள், மாடுகள் ரெயில் நிலையத்திற்கு வருவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் மாணவர்கள் ரெயில் வண்டியின் மீது கற்களால் வீசப்படும் தீமைகள் குறித்தும் பள்ளி மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் விழிப்புணர்வு கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரெயில்வே பாதுகாப்பு படை துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி மற்றும் ரவி பள்ளி மாணவ-மாணவியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.