< Back
மாநில செய்திகள்
தீபாவளியை முன்னிட்டு ஈரோட்டில் களைகட்டும் ஜவுளிச்சந்தை - ஒரே இரவில் ரூ.50 கோடி அளவுக்கு வர்த்தகம்
மாநில செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு ஈரோட்டில் களைகட்டும் ஜவுளிச்சந்தை - ஒரே இரவில் ரூ.50 கோடி அளவுக்கு வர்த்தகம்

தினத்தந்தி
|
7 Oct 2022 11:59 PM IST

தீபாவளியை முன்னிட்டு ஈரோட்டில் இரவு நேர ஜவுளி சந்தைகள் தற்போது பரபரப்பாக இயங்கி வருகின்றன.

ஈரோடு,

தீபாவளியை முன்னிட்டு ஈரோட்டில் விடியவிடிய நடக்கும் இரவுநேர ஜவுளிச் சந்தையில், மொத்த வியாபாரம் களைகட்டியுள்ளது. வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் குவிந்து வருகின்றனர். இதனால் ஈரோடு வட்டாரத்தைச் சேர்ந்த ஜவுளி விபாயாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் ஈரோடு ஜவுளிச்சந்தையில் சில்லறை வியாபாரமும் களைகட்டியுள்ளது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே செயல்பட்டு வரும் சென்ட்ரல் ஜவுளி சந்தைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து ரகம், ரகமாக ஜவுளிகளை வாங்கிச் செல்கின்றனர்.

கடந்த சில வாரங்களாக ஜவுளி சந்தை சற்று மந்தமாக காணப்பட்ட நிலையில், புரட்டாசி மாதம் கோவில் விழாக்கள் தொடங்கிய பிறகு ஈரோடு சென்ட்ரல் ஜவுளி சந்தை, அசோகபுரம் ஜவுளி சந்தை, கனி மார்க்கெட் உள்ளிட்ட இரவு நேர ஜவுளி சந்தைகள் தற்போது பரபரப்பாக இயங்கி வருகின்றன. இங்கு ஒரே இரவில் ரூ.50 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்