< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பசுமை பட்டாசுகள் விற்பனை அமோகம்
|23 Oct 2022 11:30 AM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வாங்குவதற்காக சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் குவிந்தனர்.
சென்னை,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வாங்குவதற்காக சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் குவிந்தனர். சென்னை தீவுத்திடலில் 42 பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடையும் 3 மீட்டர் இடைவெளியில் 250 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. தீவுத்திடலில் 15-ந்தேதி தொடங்கிய பட்டாசு விற்பனை வருகிற 25-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
அனைத்து கடைகளிலும் பசுமை பட்டாசுகள் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றன. அதுமட்டுமின்றி அனைத்து கடைகளிலும் எம்ஆர்பி விலையின்றி ஒரே விலையில் பட்டாசானது விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த ஆண்டு குழந்தைகளுக்கான பிரத்யேகமாக ஆயிரம் வகைகளுக்கும் மேல் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பலவித வகைகளில் பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.