நாமக்கல்
கபிலர்மலை பகுதியில்விவசாயிகள் மானிய விலையில் வேளாண் உபகரணங்கள் பெறலாம்அதிகாரி தகவல்
|பரமத்திவேலூர்:
கபிலர்மலை வட்டார உழவர் நலத்துறை உதவி வேளாண்மை அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2021-2022-ன் கீழ் இருக்கூர், பிலிக்கல்பாளையம், அ.குன்னத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பெரிய மருதூர், அய்யம்பாளையம், பஞ்சப்பாளையம், செஞ்சுடையாம்பாளையம், வலசுபாளையம், தெற்கு மற்றும் வடக்கு செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட கிராம விவசாயிகளுக்கு தார்பாய்கள், மின்கள தெளிப்பான்கள், வேளாண் உபகரணங்களின் தொகுப்பு மண்வெட்டி, களை கொத்து, கதிர் அரிவாள்-2, கடப்பாரை, காரை சட்டி ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.
எனவே விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல், கணினி சிட்டா, ரேஷன் அட்டை நகல், புகைப்படம்-1 ஆகியவற்றை கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலகத்தில் சமர்ப்பித்து பெற்று கொள்ளலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வேளாண்மை உபகரணங்களின் தொகுப்பு பெறுவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ் அல்லது உழவர் பாதுகாப்பு அட்டை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.