நாகப்பட்டினம்
வேளாண்மை கருத்தரங்கம்
|வேதாரண்யத்தில் வேளாண்மை கருத்தரங்கம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டம் குறித்து வேளாண்மை கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஷகீலா தலைமை தாங்கினார். வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின், வேளாண் இணை இயக்குனர் அகண்ட ராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் துணை இயக்குனர் வெங்கடேசன், துணை இயக்குனர்கள் சிவகுமார், கருப்பையா, வேளாண்மை அலுவலர்கள் யோகேஷ், நவீன்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மீன்வளத்துறை, கால்நடைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையினர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு வேளாண்மை தொழில்நுட்பம் மற்றும் திட்டங்கள் குறித்து பயிற்சி அளித்தனர்.
வேளாண்மை கருத்தரங்கில் வேளாண்மாதிரி நெல் வகைகள், 1250 பாரம்பரிய நெல்வகைகளை தமிழக அரசு விருது பெற்ற சிவரஞ்சனி காட்சிப்படுத்தி இருந்தார். இது போல் வேளாண்மை துறையினர் மாதிரி இடுபொருட்கள், மாதிரி உரவகைகள், வேளாண் எந்திரங்கள், காய்கறிகள் விதைகள் ஆகியவை விவசாயிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.