< Back
மாநில செய்திகள்
வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

தினத்தந்தி
|
5 Nov 2022 9:57 AM IST

வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தை துவக்கி வைத்து அவர் கூறியதாவது:-

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியின் காரணமாக சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்த 42 ஆயிரத்து 54 விவசாயிகளில் 19 ஆயிரத்து 33 விவசாயிகளுக்கு ரூ.23 கோடியே 24 லட்சம் இழப்பீடு தொகை நிறுவனத்தின் மூலம் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்து கிராமங்களிலும், விவசாயிகள் அனைவருக்கும் அனைத்து கடன் உதவிகளும் கிடைக்கும் வகையில் வங்கிகளின் மூலம் லோன் மேளா நடத்த திட்டமிட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் சாலைகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக கால்நடை கால்நடைகளை சுற்றி திரிய விட்டால் நடவடிக்கை எடுக்கவும், ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி கரையை பலப்படுத்தி தரவேண்டும். தடுப்பணைகள் கட்ட வேண்டும். வேளாண்மை துறையில் காலியாக உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு அமைச்சர் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் மனு அளித்தனர்.

மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து கலெக்டர் விவசாயிகளுக்கு நல திட்ட உதவிகள் மற்றும் மானிய விலையில் வேளாண் இடு பொருட்களை வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சுரேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேஷன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சமுத்திரம் மற்றும் விவசாயிகள் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்