வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: மிளகாய் மண்டலம்; மதுரை மல்லிகைக்கு தனி இயக்கம் ;பலா இயக்கம்;வாழை தனி தொகுப்பு திட்டம்
|தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்களாக மிளகாய் மண்டலம்; மதுரை மல்லிகைக்கு தனி இயக்கம்; பலா இயக்கம்;வாழை தனி தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை
2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பபட்டது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள்: தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து பரவலாக்கிட 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்து, மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு
பலா இயக்கம்: பண்ருட்டி பலாவிற்கு ஒருங்கிணைந்த தொகுப்பு அமைத்து பகுதிகளுக்கு ஏற்ப பலா ரகங்களை அறிமுகம் செய்து கடலூர், கன்னியாகுமரி, உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியினை 5 ஆண்டுகளில் 2500 ஹெக்டேரில் உயர்த்திட ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மிளகாய் மண்டலம்: ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரித்திட மிளகாய் மண்டலம் அறிவிக்கப்பட்டுள்ளது.செய்யப்படுகிறது.ரூ.6 கோடி நிதி ஒதுக்கீட்டில் மிளகாய் மண்டலம் செயல்படுத்தப்படும்"
"வெங்காயம் சீராக கிடைத்திட ரூ. 29 கோடியில் திட்டம்;தக்காளி உற்பத்தியை அதிகரித்திட ரூ. 19 கோடியில் திட்டம்"
தக்காளி உற்பத்தியை அதிகரிக்க சொட்டு நீர் பாசனம், அதிக மகசூல் தரும் பயிர் ரகங்களை பயிரிடுதல் போன்ற உத்திகள் ஊக்குவிக்கப்படும். இத்திட்டம் கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் திண்டுக்கல் தேனி திருப்பூர் கோவை ஆகிய மாவட்டங்களில் 19 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.
நுண்ணீர் பாசன முறை பின்பற்றி நிலத்தடி நிறை சரியாக பயன்படுத்தி அதிக சாகுபடிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். வரும் ஆண்டின் திட்டத்தின் சுமார் 60% நிதியான 650 கோடி ரூபாயை 53,400 ஹெக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசன அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்கிட, ரூ. 130 கோடி மதிப்பீட்டில் வாழைக்கான தனி தொகுப்பு திட்டம்
"உயர் ரக தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள 150 விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும்"
பள்ளி மாணவர்கள் வேளாண்மையை அறிந்துகொள்ள ரூ.1 கோடியில் பண்ணைச் சுற்றுலா
பனை சாகுபடியினை ஊக்குவித்து, பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிக்குளத்தில் ரூ.15 கோடியில் பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும்"
"குளிர்கால காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக ரூ. 2.5 கோடி ஒதுக்கீடு"
பள்ளி மாணவர்களுக்கு பண்ணைச் சுற்றுலாவுக்கு ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு
வேளாண்மையின் மகத்துவத்தை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ள கல்வித்துறையுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
"25 உழவர் சந்தைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ. 9 கோடி நிதி ஒதுக்கீடு"
சூரியகாந்தி பயிர் உற்பத்தியை அதிகரிக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு
சென்னை மாதவரம் தோட்டக்கலை பூங்கா ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்
பட்டாணி, பீன்ஸ் உள்ளிட்ட குளிர்கால காய்கறிகள் சாகுபடியை
ஊக்குவிக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு