< Back
மாநில செய்திகள்
விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
11 Oct 2022 12:15 AM IST

நிலக்கோட்டையில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், நிலக்கோட்டை பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் அல்லிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் சகாயம் முன்னிலை வகித்தார்.


100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தக்கோரியும், ஊதியம் ரூ.600 வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஜெகன், மாவட்ட பொருளாளர் செல்வம், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.







மேலும் செய்திகள்