< Back
மாநில செய்திகள்
விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கரூர்
மாநில செய்திகள்

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
9 Aug 2022 12:21 AM IST

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய அரசின் மக்கள், தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து நேற்று கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன், ராஜாமுகமது, தனபால் உள்பட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யு., அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்