< Back
மாநில செய்திகள்
நீலகிரி
மாநில செய்திகள்
விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
|13 Oct 2023 1:45 AM IST
பந்தலூர் அருகே விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தேசிய வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும், 100 நாட்கள் பணியை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும், தினசரி 600 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதற்கு சங்க மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.