< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல், பழனி, தொப்பம்பட்டியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

திண்டுக்கல், பழனி, தொப்பம்பட்டியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
22 Aug 2023 9:00 PM GMT

திண்டுக்கல், பழனி, தொப்பம்பட்டியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல், பழனி, தொப்பம்பட்டியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் அம்மையப்பன், பொருளாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஒன்றிய கவுன்சிலர் செல்வவிநாயகம் கலந்துகொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய-மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும். 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை வேறு பணிகளுக்கு ஒதுக்கக்கூடாது. ஊரக பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதோடு, சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பழனி, தொப்பம்பட்டி

இதேபோல் பழனி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில், சங்க நிர்வாகிகள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தொப்பம்பட்டி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கனகு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் அருள்செல்வன் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில், ஒன்றிய நிர்வாகிகள் சின்னத்துரை, முகமது இஸ்மாயில், ஆறுமுகம், முருகன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்