< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாய தொழிலாளர்கள்
|25 Aug 2022 10:00 PM IST
நிலக்கோட்டையில், ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாய தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததை கண்டித்தும், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பிள்ளையார்நத்தத்தில், 100 நாள் வேலைத்திட்டத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை பாதியாக குறைத்ததை கண்டித்தும் கோஷமிட்டனர். போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் அருள்செல்வன், ஒன்றிய தலைவர் கல்யாணசுந்தரம், ஒன்றிய பொருளாளர் சுப்பிரமணி, ஒன்றிய பொறுப்பாளர்கள் வெள்ளைச்சாமி, ஜெயராமன், காசிமாயன், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.